மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர நடித்து இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து திரைத்துறையில் வலம் வரும் இயக்குனர் இமயம் தற்போது தமிழர் அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது அவருகு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் இப்போது நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bharathiraja, 20th of August 2022
adbanner