‘சூர்யா 42’ வெளிவந்த சூப்பர் தகவல்!!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது என்ற செய்தி கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த செய்தி தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ‘சிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் தேவிஸ்ரீபிரசாத் சூர்யாவின் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜை சென்னையில் ஆகஸ்ட் 21ம் தேதி அதாவது நாளை நடைபெற இருப்பதாகவும் நாளை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யா, இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 42’ படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya, Suriya 42, Siruththai Siva, 20th of August 2022