‘திருச்சிற்றம்பலம் படம்’ வெற்றியா? தோல்வியா? என அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

‘திருச்சிற்றம்பலம்’ படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

மித்ரன் ஜவஹார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா போன்ற 3 நாயகிகள் உட்பட பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ கடந்த வியாழக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Dhanush, Thiruchitrambalam 20-Aug-2022

சினிமா விமர்சகர்களும், ரசிகர்களும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். மேலும் இரண்டாம் நாளில் படம் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வசூலை கணித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் ரிசல்ட்டை அறிவித்துள்ளனர். அதில், “Namma Pazham jeichuttaan? It’s Blockbuster hit” என சன் பிக்சர்ஸ் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளனர். அதற்கு தனுஷ் ஹார்ட் எமோஜியை பதிவிட்டு ரீடுவீட் செய்திருக்கிறார்.