நடிகை அதிதி ஷங்கர் விஜய் குறித்து பேசியதில் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘விருமன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் அதிதி ஷங்கர். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மாபெரும் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

‘விருமன்’ படத்தை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை அதிதி ஷங்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யுடன் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார். அதில் “விஜய் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் மற்றும் அவருடன் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் விஜய் – அதிதி இணையும் படத்துக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதோடு அதிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.