‘பாய்காட்’ குறித்து விஜய் தேவரகொண்டா தெரிவித்த கருத்து இணையத்தில் வைரல்!
பாலிவுட் ஸ்டார் அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸான நிலையில், இந்த படத்துக்கு எதிராக வட இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்கள் எழுந்தன.

கடந்த சில வருடங்களுக்கு முன் அமீர்கான் பேசுகையில் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை தொடர்ந்து, அவர் தேசபக்தி அற்றவர் எனக் கூறி “லால்சிங் சத்தா படத்தைப் புறக்கணிப்போம்” என சிலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வந்தனர். இது குறித்து முற்கூட்டியே பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பார்க்கவேண்டும்” என தெரிவித்திருந்தார். ஆனால் படம் அடைந்த படுதோல்விக்கு இணையத்தில் வைரலாக இந்த ‘பாய்காட் லால் சிங் சத்தா’ ஹேஷ்டேக் ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து தற்போது நடிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தெலுங்கின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா இது குறித்து கூறுகையில் “பாய்காட்” ட்ரண்ட்டால் அமீர்கான் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர் படத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றியுள்ளார்கள் என்றும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் மற்றும் அவர்களின் வேலை, வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ‘பாய்காட்’ ஏன் எதற்கு என்று தெரியவில்லை என்றும் தவறான புரிதலால் தான் நடக்கிறது.எனக் குறிப்பிட்டுள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.