முதல் முறையாக விஜய் படம் பிடித்துள்ள இடம்! சூப்பர் தகவல்

விஜய் படத்திற்கு தெலுங்கில் முதல் முறை கிடைத்துள்ள அங்கீகாரம்!

தளபதி விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியை தழுவியது.

Vijay, Beast, Gemini TV 20-Aug-2022

இந்த படத்தின் மோசமான திரைக்கதை காரணமாக ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை கோபத்துடன் வெளிப்படுத்தினர். அந்தவகையில் சமூகவலைதளங்களில் மீம்ஸ்களும், ட்ரோல்களும் உருவாகின. குறிப்பாக படத்தின் இயக்குனர் நெல்சன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

நீண்ட காலத்தின் பின் விஜய்யின் தோல்விப் படமாக ‘பீஸ்ட்’ அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏற்கனவே ஓடிடியில் இந்த திரைப்படம் ரிலீஸாகிவிட்ட நிலையில் முதல் முறையாக பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சேனலான ஜெமினி சேனலில் இந்த திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.