விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்கள்!

‘கோப்ரா’ படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

சீயான் விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகும் நிலையில், இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Vikram, Cobra 20-Aug-2022

‘கோப்ரா’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்தப் படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மற்றும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் உள்ளது என்பதும், கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் உள்ளதாகவும் மிகவும் அதிகமாக இருப்பதாக கருத்துக்கள் வெளியானதை அடுத்து, ‘கோப்ரா’ படத்தின் ரன்னிங் டைமை குறைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டரை மணி நேரமாக மாற்றும் நடவடிக்கையில் சில காட்சிகளை நீக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இந்த படம் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.