சினிமாவில் இருந்து விரைவில் ஓய்வு – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சினிமாவில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போவதாக பிரபல நடிகரின் பேச்சால் ஏற்பட்ட பரபரப்பு!

சீயான் விக்ரம் தற்போது நடித்து முடித்துள்ள ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Vikram, Ponniyin Selvan, Cobra 20-Aug-2022

கடந்த மூன்று வருடங்களாக நடந்துவந்த ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்துள்ளதை அடுத்து, தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோப்ரா’ ரிலீஸூக்குப் பின் ஒரு மாத இடைவெளியில், அடுத்து அவர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ‘சோழா சோழா’ பாடல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.