சூர்யா படத்தின் ஊடே தமிழில் என்ட்ரி கொடுக்கும் பாலிவுட் நடிகை?

சூர்யா நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Suriya, Disha Patani, Siruththai Siva, 19th of August 2022

இந்த நிலையில் தற்போது சூர்யா- சிறுத்தை சிவா இணையும் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடியவர் யார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் திஷா படானி நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உள்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள திஷா படானி இந்த படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Suriya, Disha Patani, Siruththai Siva, 19th of August 2022
adbanner