‘திருச்சிற்றம்பலம்’ களை கட்டும் கல்லா – முதல் நாள் வசூல் நிலவரம்

தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டன. இதனை அடுத்து இந்த படம் நிச்சயம் தனுஷின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் நேற்று முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் ரூபாய் 6 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதிலும் நேற்று வேலை நாளில் இந்த வசூல் ஆச்சரியம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை, மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் இந்த மூன்று நாட்களிலும் இந்த படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் ஓபனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 6 கோடியும் உலகம் முழுவதும் 9 கோடியும் ‘திருச்சிற்றம்பலம்’ படம் முதல் நாளில் வசூல் செய்துள்ளது என டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

Dhanush, Thiruchitrambalam, 19th of August 2022
adbanner