அமீர் கானை தொடர்ந்து ஷாருக் கான் படத்துக்கு எதிராக டிவிட்டரில் தொடரும் ஹேஷ்டேக்!

பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு எதிராக குவியும் நெட்டிசன்கள்!

பாலிவுட் நடிகர் அமீர் கானின் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்ததால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதேசமயம் இந்த படத்துக்கு எதிராக வட இந்தியாவில் எதிர்ப்புக்களும் பலமாக எழுந்தது.

Shah Rukh Khan, Pathaan 19-Aug-2022

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமீர்கான் “இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது” என்று கூறியதை அடுத்து அவர் தேசபக்தி அற்றவர் எனக் குறிப்பிட்டு “தற்போது ‘லால் சிங் சத்தா’ படத்தைப் புறக்கணிப்போம்” என பலர் ஹேஷ்டேக் உருவாக்கி பகிர்ந்து வந்தனர். இது குறித்து அந்தவேளை பேசிய அமீர்கான் “நான் நமது நாட்டை நேசிக்கவில்லை என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. என் படத்தை புறக்கணிக்காமல் அனைவரும் பாருங்கள்” எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் படம் படுதோல்வி அடைந்ததற்கு இந்த ஹேஷ்டேக்குகளும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அமீர்கான் படத்தை அடுத்து ஷாருக் கான் நடித்த ‘பதான்’ திரைப்படத்துக்கு எதிராகவும் BoycattPathan என்ற ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.