தனது அடுத்த படத்தையும் இயக்கும் இயக்குனர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த விக்ரம்! ஆடியோ ரிலீஸ்

சீயான் விக்ரமின் அடுத்த படத்தின் வெளியான அறிவிப்பு!

சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் பல வருடங்களாக படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் முடிவடைந்து, தயாரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Vikram, Ajay Gnanamuthu 19-Aug-2022

இந்நிலையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலாகி வந்தன. அதை தற்போது விக்ரம் உறுதிப் படுத்தும் வகையில், சமீபத்தில் டுவிட்டர் ஸ்பேஸில் ரசிகர்கள் மற்றும் ‘கோப்ரா’ படக்குழுவினருடன் நடந்த உரையாடலில் கலந்துகொண்ட விக்ரம், அடுத்து அஜய் ஞானமுத்து படத்தில் நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தயாராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.