200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி சேரும் விஜய் பட நடிகை! செம அப்டேட்

கோடிக்கணக்கான பட்ஜெட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று கூறப்படும் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘சர்க்காரு வாரு பட்டா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தோடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை தயாரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Mahesh Babu, SSMB28 19-Aug-2022

அந்தவகையில், மகேஷ் பாபுவின் 28 வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளார் என்று கூறப்படும் நிலையில், 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் சார்ந்ததாக உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இணையதளத்தில் super star Mahesh babu28 என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mahesh Babu, SSMB28 19-Aug-2022 001
adbanner