ராம் சரண் – கவுதம் கூட்டணியில் உருவாகும் ‘ஆர்சி 16’! இவரா இசையமைப்பாளர்?

ராம் சரண் நடிக்கும் அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள் ராம்சரண் – ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து, ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்துள்ளது.

Ram Charan, Gowtam Naidu Tinnanuri 19-Aug-2022 001

இதை தொடர்ந்து தற்போது, ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் பிரமாண்டமாக ‘ஆர்.சி 15’ படம் உருவாகி வருகிறது. இப்படம் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்து ராம்சரண், கௌதம் நாயுடு திண்ணனுரி
இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.