‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ ரிலீஸில் பங்கேற்க இருக்கும் பிரபலம்

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக்கிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், முதல்கட்டமாக செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் இந்த படத்தின் ஆடியோ விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு ரஜினிகாந்த் மிகவும் நெருக்கமானவர் என்பதால் இந்த ஆடியோ விழாவில் வருவதற்கு அவர் ஒப்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

Rajinikanth, Simbu, VenduThanindhathu Kaadu, 17th of August 2022