பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் சோழா சோழா பாடல் அரசியல் பேசுகிறதா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ’பொன்னி நதி’ ரிலீசாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சோழா சோழா’ என்று என்ற பாடல் வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இப்பாடல் அரசியல் வரிகள் கொண்டதாக அமையும் என கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பாடல்களில் நாம் தமிழர் மேடைகளில் ஒலிக்கும் பல வாசகங்கள் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகிய இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொன்னி நதி பாடல் போலவே இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா விரைவில் நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

Pooniyin Selvan, Pooniyin Selvan Second single song, 17th of August 2022