படத்தை வெளியிட ராசி நாள் பார்க்கும் ”இந்தியன் 2’ படக்குழு?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல்ஹாசன் இந்த வார இறுதியில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் வரும் டிசம்பரில் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட சென்டிமென்டாக படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படம் சுமார் 500 கோடி வசூல் செய்த நிலையில் இந்தியன் 2 அதை விட அதிகமாக வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Indian 2, Kamal Haasan, 17th of August 2022
adbanner