திணறும் வாரிசு படக்குழு – இயக்குனர் வம்சியின் அதிரடி நடவடிக்கை?

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்,விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதால் படக்குழுவினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப்பட்ட போதிலும் சமீபத்தில் விஜய் மற்றும் பிரபு நடித்த காட்சிகளின் வீடியோ வெளியானது படக்குழுவினர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் வம்சி தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி படப்பிடிப்பு தளத்தில் யாருக்கும் இனி செல்போன் அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வீடியோக்கள் இனி வெளி வர வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வருகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை வம்சி இயக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Varisu, Vijay ,Vamsy, 17th of August 2022