விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் லோகேஷ் கனகராஜ்?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கவுதம் மேனன், பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட 6 வில்லன்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 50 சதவீத விஜய் படம் என்றும் 50 சதவீத லோகேஷ் படம் என்றும் கூறப்பட்டது. ஆனால் ’தளபதி 67’ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனை நிரூபிக்கும் வகையில் இந்த படத்தில் பாடல்களே இல்லை என்ற தகவல் தற்போது திரை வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ’கைதி’ படத்தில் பாடல்களே இல்லாத நிலையில் அதே போன்று முழுக்க முழுக்க வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய படம்தான் ’தளபதி 67’ என்றும் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தீம் சாங்ஸ் மட்டும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது அதிரடியை தளபதி விஜய்யின் ’தளபதி 67’ படம் மூலம் வெளிப்படுத்த இருக்கிறார் என்ற தகவல் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay, Lokesh Kanagaraj, Vijay 67, 17th of August 2022
adbanner