பிசாசு 2 பற்றி வெளியான புதிய மாஸ் தகவல்!

மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த படம் திரைக்கு வருகிறது.

பிசாசு 2 படம் உலகம் முழுக்க தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா ஆடையில்லாத காட்சிகளில் நடித்து இருக்கிறார் என்றும், ஆனால் அந்த காட்சிகளை மிஷ்கின் நீக்கிவிட்டார் என்றும் செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளும் படம் பார்க்க வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக மிஷ்கின் கூறி இருக்கிறார்.

மேலும் பிசாசு முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் என்ன லிங்க் என கேட்டதற்கு, அப்படி எந்த தொடர்பும் பிசாசு 2 படத்தில் இருக்காது என அவர் கூறி இருக்கிறார்.இதனால பிசாசு 2 படத்தின் கதை புதிதாக தான் இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

Pisasu 2, Mysskin, Andrea Jeremiah, 16th of August 2022