நவீன தொழில் நுட்பத்துடன் வெளியாகும் ”பொன்னியின் செல்வன்” !

தமிழ் சினிமாவில், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை பல ஆண்டுகளாக இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் முயற்சி செய்தனர். இதில், இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வனை இயக்கி வருகிறார். லைக்கா தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.இசையமைத்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் பொன்னி நதி என்ற பாடல் ரிலீஸானது.

இந்த நிலையில், பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, இப்படத்தை புரமோஷன் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், மணிரத்னத்தின் மெற்றாஸ் டாக்கீஸ் நிறுவனம் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது., அதன்படி, ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தில் தியேட்டரில் வெளியாகும் முதல் படம் பொன்னியின் செல்வன்-1 எனவும், இந்த அனுபவத்தை பெற்று மகிழுங்கள் என தெரிவித்துள்ளது.

Ponniyin Selvan, Manirathnam 16th of August 2022

இதுவரை, 5.1. டால்பின் சவுண்ட்களை கேட்டு வந்த ரசிகர்கள் முதன் முதலில் பொன்னியில் செல்வன் படத்தின் மூலம் நவீன தொழில் நுட்பமான ஐ மேக்ஸ்-ல் இப்படத்தைப் பார்த்து மகிழ ஆவலுடன் காத்துள்ளனர்.

adbanner