ரஜினியின் 47 வருட திரையுலக வாழ்க்கை – ஐஸ்வர்யா நெகிழ்ச்சி பதிவு!

1975-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன்பின்னர் இவரின் நடிப்பின் மூலமாக கதாநாயகனாக உருவெடுத்து பல படங்களின் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான பைரவி, முள்ளும் மலரும், பில்லா, காளி, ஜானி, படிக்காதவன், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து நடித்து முன்னணி நடிகராக மாறினார். தமிழ் திரையுலகில் மட்டும்மல்லாது இந்திய திரையுலகிற்கு முன்னணி கதாநாயகனாக உருவெடுத்திருக்கும் ரஜினி திரையுலகிற்கு வந்து 47 வருடங்களாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முதல் படமான கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் கடந்த 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. இதனை அடுத்து நேற்றுடன் ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெகிழ்ச்சியான தருனத்தை அவரது மகள் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தின் மூலம் கொண்டாட்டமாக பகிர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரதின விழா கொண்டாடப்படும் அதேவேளையில் அவருடைய தந்தையின் திரைவாழ்க்கையை குறிக்கும் வகையில் ஐஸ்வர்யா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth, Aishwaryaa, celebrity 16th of August 2022

அதில், சுதந்திரத்தின் 76 ஆண்டுகள் தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம். பெருமைமிக்க 47 வருட ரஜினிசம், கடின உழைப்பு அர்ப்பணிப்பு! அவருக்கு பிறந்ததில் பெருமை, பெருமை மகள் என்று குறிப்பிட்டு, அதோடு ரஜினிக்கு தேசியக்கொடியை குத்தி விடும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவு அனைவரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.