தனுஷ் நடித்து வரும் தமிழ், தெலுங்கு திரைப்படமான ’வாத்தி’ திரைப்படத்திற்கு அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கு அவர் ரூ.15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
மேலும் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ‘தி க்ரே மேன்’ என்ற திரைப்படத்திற்கு அவரது சம்பளம் ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த கிரிஸ் எவன்ஸ் என்பவருக்கு 180 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் அடுத்த நிலை நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் தனுஷ் 20 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும், இன்னும் 10 முதல் 15 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனுஷ் தரப்பினர் கூறியபோது சம்பளத்தை உயர்த்த் தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் வரக்கூடாது என்பதற்காகவே தனுஷ் நியாயமான சம்பளம் வாங்குகிறார் என்று கூறி வருகின்றனர்.

Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.