’ஏகே 61’ படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார் தல அஜித்! வீடியோ வைரல்

‘ஏகே 61’ படப்பிடிப்பு குறித்து வெளியான செம அப்டேட்!

தல அஜித் நடித்து வரும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டுள்ளார்.

Ajith, AK 61, Manju Warrier 16-Aug-2022

‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜித் அல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் இன்று தொடக்கம் ‘ஏகே 61’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதை அடுத்து விசாகப்பட்டினத்திற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அஜித் புறப்பட்டுள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் ரசிகர்கள் மூலம் வைரலாகி வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.