ஓடிடியில் வெளியாகும் ‘மேதகு 2’ திரைப்படம்! காரணம் இதுவா?

‘மேதகு 2’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான முக்கிய தகவல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக உருவான ‘மேதகு ‘ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தில் பிரபாகரன் எப்படி ஆயுதப் பாதையை நோக்கி சென்றார் என்பது வரை மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வரும் எனப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

Methagu 2, Methagu 2 OTT Release 16-Aug-2022

அந்தவகையில் தற்போது ‘மேதகு 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இல்லாமல் புதுக்கலைஞர்கள் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். நவம்பர் 26 ஆம் தேதி மறைந்த விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘மேதகு 2’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகம் போல ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் இந்த படத்துக்கு சென்ஸார் சான்றிதழ் கிடைக்காது என்பதால் ஓடிடியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தமிழ்ஸ் ஓடிடி என்ற தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version