ஆமிர்கான் படத்துக்கு ஆதரவு – நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளான ஹ்ரித்திக் ரோஷன்! ட்ரெண்டிங் ஆகும் டுவிட்

ஹ்ரித்திக் ரோஷன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கான் நடித்து வெளியாகியுள்ள படம் ‘லால் சிங் சத்தா’. ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த ‘லால் சிங் சத்தா’. இந்த படத்தை இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.

Hrithik Roshan, Laal Singh Chaddha 16-Aug-2022

கடந்த வாரம் வெளியான இந்த படம் ரேட்டிங்கில் பின்தங்கி பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்பில் சிக்கி திணறுகிறது. படம் வெளியாகும் முன்னே படத்தை புறக்கணிப்பதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், வசூலில் படம் தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், ‘லால் சிங் சத்தா’ படம் சிறப்பாக உள்ளதாகவும், அனைவரும் மிஸ் பண்ணாமல் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். இதனால் கோபத்தை ஹ்ரித்திக் ரோஷன் பக்கம் திருப்பிய நெட்டிசன்கள் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து அடுத்து வர உள்ள பாலிவுட் படமான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று டுவிட்டரில் #BoycottVikramVedha என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் நடிகர் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த ‘விக்ரம் வேதா’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.