அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்

அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!

தல அஜித் ‘வலிமை’ படத்தை அடுத்து தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் உள்ளது.

Ajith, AK 62, Vignesh Shivan 16-Aug-2022

இந்நிலையில் தல அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் ஏற்கனேவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் விக்னேஷ் சிவன் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.