விஜய்யின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் மேனன்! லோகேஷின் செம திட்டம்

விஜய் படத்தில் முதன் முதலாக இணையும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்து வெளியான செய்தி!

‘மாநகரம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின் ‘கைதி’ மற்றும் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கினார். மேலும் சமீபத்தில் உலகநாயகன் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூபா 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Gautham Menon, Varisu 16-Aug-2022

இந்நிலையில் அதையடுத்து விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க தயாராகியுள்ளார். இப்போது அவர் விஜய் படத்தின் திரைக்கதை வேலைகளில் பிஸியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதைப்படி படத்தில் 6 வில்லன்கள் கதாபாத்திரங்கள் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் பிருத்விராஜ், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் போன்றோர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் தற்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.