ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான ’ஆகஸ்ட் 16, 1947’ படத்தின் டீசர்!!

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் பொன் குமார் இயக்கத்தில் உருவான ’ஆகஸ்ட் 16, 1947’ என்ற படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைத்துள்ளார். செல்வகுமார் ஒளிப்பதிவில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு சுதந்திரமடைந்து 76 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் நாடு சுதந்திரமடைய நடந்த சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி தான் இந்த கதை என்றும் ஒரு சிறு கிராமத்திலுள்ள மக்கள் வெள்ளையனுக்கு எதிராக எழுச்சி அடைந்து செய்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது .

Gautham Karthik, AR Murugadoss, August 16 1947, 16th of August 2022

மேலும் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.