ஒரே இடத்தில் அஜித் – விஜய் படங்களின் படப்பிடிப்பு! வெளியான சூப்பர் தகவல்

அஜித் – விஜய் படப்பிடிப்பு குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith, Vijay 16-Aug-2022

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 61’ திரைப்படம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விசாகப் பட்டணத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழு அங்கு தங்கியுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பும் தற்போது விசாகப் பட்டணத்தில்தான் நடைபெறவுள்ளதாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல விஜய்யின் ‘வேலாயுதம்’ மற்றும் அஜித்தின் ‘மங்காத்தா’ போன்ற படங்களின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்த போது இருவரும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.