சென்னை வரும் காஜல் அகர்வால், காரணம் வெளியானது…

பிரபல நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் காஜல்அகர்வால் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சென்னை வருவதாகவும் அவர் நடிக்கும் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளதை அடுத்து காஜல் அகர்வால் சென்னைக்கு வருகிறார். சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த காஜல்அகர்வால் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை செல்வதாக கூறியுள்ளார். காஜல் அகர்வால் திருமணத்திற்கு பின்னர் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் ’இந்தியன் 2’ படம் உட்பட ஏற்கனவே கமிட்டான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajal Aggarwal, Indian 2, 15th of August 2022
adbanner