அதிதிகாக ஷங்கரிடம் மன்னிப்பு கேட்ட தமிழ் நடிகர்! என்ன நடந்தது??

கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ படத்தை பார்த்து அதிதி தான் எனது காதலி என மீடியா முன் ஆவேசமாக பேசிய நடிகர் ஒருவர் தற்போது திடீரென பல்டி அடித்து அதிதி எனது தங்கச்சி மாதிரி என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்த ’விருமன்’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியான போது பல திரையுலக பிரபலங்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார்கள். அந்த வகையில் தமிழ் திரையுலக நடிகர்களில் ஒருவரான கூல் சுரேஷ், ‘விருமன்’ படத்தை பார்த்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அதிதியை தியேட்டரில் பார்த்து சில்லறைய சிதற விட்டேன் என்றும் அதிதி தான் என்னுடைய காதலி என்றும் பேசினார். அதுமட்டுமின்றி அதிதியை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும் ஷங்கர் தனது படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னையும் அதிதி உடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென அவர் தற்போது அதிதி தனது தங்கச்சி மாதிரி என்றும் தனது பள்ளி தோழி தேன்மொழி நினைப்பில் நான் அவ்வாறு பேசி விட்டேன் என்றும் நான் அப்படி பேசியது தவறுதான் என்றும், ஷங்கர் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமின்றி அதிதி எனக்கு தங்கச்சி என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Aditi Shankar, Shankar 15th of August 2022