Viruman Movie Review
ஊரிலுள்ள பெரும்புள்ளி பிரகாஷ் ராஜ். இவரின் மனைவி சரண்யா பொன்வண்ணன். இவர்களுக்கு நான்கு மகன்கள். இதில் கடைக்குட்டி கார்த்தி. சரண்யாவின் இறப்புக்கு பிரகாஷ் ராஜ் காரணமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியேறும் கார்த்தி இவரை பழிவாங்க வேண்டும் என்று கோபத்துடன் இருக்கிறார்.
கார்த்தி பிரகாஷ் ராஜ் உடன் இருக்கும் சகோதரர்களை தன் பக்கம் இழுக்க முயல்கிறார். ஆனால் பிரகாஷ் ராஜ், கார்த்தியை ஏமாற்றி சரண்யா பொன்வண்ணன் பெயரில் இருக்கும் சொத்தை அபகரிக்க நினைக்கிறார். இறுதியில் கார்த்தி, பிரகாஷ் ராஜை எப்படி தோற்கடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, ஆக்ரோஷமான நடிப்பு, தந்தை பிரகாஷ் ராஜ் மற்றும் வில்லன் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருடன் மோதும் காட்சியில் ரசிகர்களை அசத்துகிறார். அது போலவே பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா போன்றோரின் அனுபவ நடிப்பு படத்துக்கு பலம்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி சங்கர் சுமாராக நடித்து இருக்கிறார். குறிப்பாக குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியின் காமெடி சில இடங்களில் கைகொடுத்து இருக்கிறது.
குடும்ப சண்டை என்ற வழமையான கதையில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் முத்தையா. திரைக்கதை விறுவிறுப்புக் குறைவாகவே உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர். மதுரை பாடல் தாளம் போட வைக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு சொல்லும்படியாக இருக்கிறது.
முன்னணி தளங்களின் கணிப்பு இதோ…
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.