‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரக்ஷன்!

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறிய ரக்ஷன் தெரிவித்த தகவல்!

விஜய் டிவியின் மிகவும் விரும்பத்தக்க நிகழ்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி அமைந்திருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் அடுத்தடுத்து 2 மற்றும் 3 சீசன்கள் வெளியாகின.

இதில் போட்டியாளர்கள் மட்டுமே மாற்றப்பட்டார்கள், கோமாளிகள், நடுவர்கள் மற்றும் தொகுப்பாளர் எல்லோருமே முதல் சீசனில் இருந்து பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VJ Rakshan, Cook With Comali 15-Aug-2022

அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளருக்கு தொகுப்பாளராகவும் சிலசமயங்களில் போட்டியாளர்களுக்கு உதவியாளராகவும் கோமாளிகளுடன் கோமாளியாகவும் என பன்முக திறமையை காட்டி வந்தவர் ரக்ஷன்.

இவர் 3வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் என்ன என்பது தெரியாதிருந்தது. இது குறித்து ஒரு பேட்டியில் ரக்ஷனிடம் கேட்க, அதற்கு அவர், இறுதி நிகழ்ச்சியின் போது எனக்கு கடுமையான ஜுரம், கொரோனாவாக இருக்குமோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் இறுதி நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

adbanner