வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசிய கொடி ஏற்றிய நடிகர் – விளாசும் நெட்டிசன்கள்

பிரபல நடிகர் வீடு துடைக்கும் மாப் குச்சியால் தேசிய கொடி ஏற்றியதாக கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தற்போது சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

Soori 15-Aug-2022 001

அந்த வகையில் ரஜினி, விஜய் என பல முன்னணி நடிகர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றியிருந்தனர். அந்த புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலானது

இந்நிலையில் நடிகர் சூரி அவரது அபார்ட்மெண்டில் தற்போது தேசிய கொடியை ஏற்றி இருக்கிறார். அதன் புகைப்படத்தை சூரி வெளியிட்டுள்ள நிலையில், அதை பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Soori 15-Aug-2022

வீடு துடைக்கும் மாப் குச்சியில் அவர் தேசிய கொடி ஏற்றி இருப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது குறித்து நடிகர் சூரி என்ன கூற போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

adbanner