‘கேஜிஎப்’ படங்களின் இயக்குனரின் அடுத்த படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கும் அடுத்த படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

‘கேஜிஎப்’ படத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக இயக்கி வரும் படம் ‘சலார்’. ‘கேஜிஎப் 2’ படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் திரைக்கதையில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

Salaar, Prabhas 15-Aug-2022

இப்படத்தின் புதிய அப்டேடிற்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், இன்று 75 வது சுதந்திர தினத்தன்று, பிற்பகல் 12:58 மணிக்கு சலார் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் பிரஷாந்த் நீல் சில நிமிடங்களுக்கு முன் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Salaar, Prabhas 15-Aug-2022 003