சிம்புவின் கொள்கை முடிவு குவியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

திரையுலக பிரபலங்கள் பலர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எத்தனை கோடி கொடுத்தாலும் குறிப்பிட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கொள்கை முடிவை நடிகர் சிம்பு எடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

முன்னணி மது தயாரிப்பு நிறுவனமொன்று சிம்புவை அணுகி தங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க கோரியதாகவும் அதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முன் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் மது விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று சிம்பு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சிம்பு, தான் மது குடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் முழுக்க முழுக்க சைவத்துக்கு மாறி விட்டதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவின் இந்த அதிரடி முடிவுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Simbu, Celebrity,14th of August 2022
adbanner