சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ பாடல்

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீசான நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர் ரகுமான் இசையில் அவரே பாடிய இந்த பாடல் மிகப்பெரிய அளவில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை தாமரை எழுதி உள்ளார்.

Simbu, Vendhu Thanindhathu Kaadu, 14th of August 2022


சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.