சூர்யாவுக்காக காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யா நடிப்பில் கலக்கி இருப்பார் என்பதும் இதனை அடுத்து ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதை கோடிட்டு காட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை முடித்தவுடன் அவர் ’விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவுக்காக ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அது எந்த மாதிரி கதையாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் ’இரும்புக்கை மாயாவி’ என்ற கதை அவருக்காகவே எழுதியது என்றும் சூர்யாவை மனதில் வைத்துதான் அந்த கதையை எழுதினேன் என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.

அந்த கதையை 4, 5 வருடமாக ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் அந்த கதை முழுவதும் சூர்யாவுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார். கண்டிப்பாக ஒரு நாள் சூர்யா நடிப்பில் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் ’இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் உருவாகும் என்றும் லோகேஷ் கனகராஜ் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version