சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘சிவாஜி’ இரண்டாம் பாகம் ஏவிஎம் நிறுவனம் எடுத்த முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’சிவாஜி’. இந்த திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது என்பதும், 60 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.152 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற தொடரை தயாரித்து உள்ள ஏவிஎம் நிறுவனம் ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் அருணா குகன் ’தமிழ் ராக்கர்ஸ்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சிறந்த திரைக்கதை அமையவேண்டும் என்றும் கூறியுள்ளார், இதனையடுத்து ரஜினிகாந்த் – ஷங்கர் இணையும் ’சிவாஜி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth, Sivaji, AVM Productions, Shankar, 14th of August 2022