தம்பி ராமையா எடுத்திருக்கும் அதிர்ச்சி முடிவு?

வெற்றி நடித்த ‘ஜீவி 2’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்ப் சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாக்யராஜ், தம்பி ராமையா, சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் தம்பி ராமையா பேசும்போது, ‘பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இடைவெளி இருக்கும். ஆனால் ’ ஜீவி’ படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தை எடுத்து விட்டதால் நிச்சயமாக இந்த படத்தில் ஏதோ இருக்கும் என்று நம்பலாம். இந்த படம் உயரத்தைத் தொடும் என்று சொல்ல முடியாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு துயரத்தை கொடுக்காது’ என்று கூறினார்.

மேலும் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ’ராஜா கிளி’ என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அதனால் இனி படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தம்பி ராமையா கூறினார். இதனை அடுத்து பேச வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘தம்பி ராமையா படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது என்றும் அப்படி குறைத்துக் கொண்டால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம் என்றும் அன்புடன் எச்சரிக்கை விடுத்தார்’.

Thambi Ramaiah, Jiivi 2, Seeman 14th of August 2022
adbanner