நயன்தாரா திருமணத்திற்கு பிறகு நடித்து முடித்துக் கொடுத்த முதல் படம்!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில் பார்சிலோனா செல்லும் முன் நயன்தாரா தான் நடித்துக்கொண்டு இருந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா தன்னுடைய கேரக்டரின் படப்பிடிப்பை முடித்த உடன் தான், அவர் தனது கணவருடன் பார்சிலோனா சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு இன்றுடன் முடிவடையும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nayanthara, Celebrity, Jayam Ravi , 14th of August 2022

மேலும் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா முடித்துக் கொடுத்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படம் குறித்த புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த மலையாள திரைப்படமான ’கோல்டு’ வரும் ஓணம் திருநாளான செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.