நடிகர் மோகன்லால்லின் மெகா ஹிட் படத்தின் அடுத்த பாகம் குறித்த புதிய அப்டேட்!

மோகன்லால், மீனா நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகிய ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும், மலையாளத்தில் உருவான இந்த படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. மேலும் தமிழில் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 100 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து மூன்றாம் பாகம் உருவாக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

‘த்ரிஷ்யம்’ படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோர் ‘த்ரிஷ்யம் 3’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அனில் ஜான்சன் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohanlal, Drshyam 13th of August 2022
adbanner