அமெரிக்க இசை நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட “பொன்னியின் செல்வன்” பாடல் வீடியோ

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் என்ற நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அவர் பல திரைப்பட பாடல்களை பாடிய நிலையில் அதில் ஒரு பாடலாக ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி என்ற பாடலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

Ponniyin Selvan, A R Rahman, 13th of August 2022

ஏ.ஆர்.ரஹ்மான், ஜொனிதா காந்தி, பாம்பே பாக்யா உள்ளிட்ட பலர் பாடிய இந்த வீடியோ ஒரு சில நிமிடங்களுக்கு முன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை பார்க்கும் போதே இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

adbanner