அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தால் வெளியாகும் தனுஷ் படம்!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் தனுஷ் படத்தை ரிலீஸ் செய்வது குறித்த செய்தி!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, Thiruchitrambalam 13-Aug-2022

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடைபெற்றது.

மேலும் இப்படத்தின் தமிழ ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க வெளியீட்டு உரிமையை ப்ரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம்தான் கமலின் ‘விக்ரம்’ திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, Thiruchitrambalam 13-Aug-2022 001