முதல் நாளில் வசூலை அள்ளிய கார்த்தியின் விருமன்

கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளதை அடுத்து இந்த படம் முதல்நாளில் மிக அபாரமான வசூல் செய்துள்ளதாகவும் இதுவரை வெளியான கார்த்தி படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் ‘விருமன்’ தான் என்றும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொதுவாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் என்றால் பி மற்றும் சி சென்டர்களில் மட்டும்தான் நன்றாக ஓடும் என்று கூறப்பட்ட நிலையில் ‘விருமன்’ திரைப்படம் நேற்று ஏ சென்டர்களில் அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பார்த்த அனைவருமே இது ஒரு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்றும் குறிப்பாக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கரின் நடிப்பு மிக அபாரமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று இத்திரைப்படத்திற்கு கூட்டம் அதிகமானதால் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கில் நள்ளிரவு 12.45 மணி காட்சி திரையிடப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாள் விடுமுறை என்பதால் முதல் நான்கு நாட்கள் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் முத்தையாவின் விறுவிறுப்பான திரைக்கதை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளதாக படம் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் ‘விருமன்’ திரைப்படம் கார்த்தியின் இன்னொரு வெற்றிப் படமாக அமைந்துள்ளது என்பது நேற்றைய வசூலில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

Viruman, Karthi, Aditi Shankar, Prakash Raj, 13th of August 2022