கே ஜி எஃப் தயாரிப்பு நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கும் படத்தில் இணையும் கீர்த்தி சுரேஷ்! சூப்பர் தகவல்

சுதா கொங்கரா – கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த செம அப்டேட்!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘கேஜிஎப்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சுதா கொங்காரா இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்க வாய்ப்பில்லை என்றும் ஏனெனில் சுதா கொங்கரா தற்போது இந்தியில் ‘சூரரைப் போற்று’ ரீமேக்கை இயக்கி வருகிறார்.

Sudha Kongara Prasad, Keerthi Suresh 13-Aug-2022

இந்த படத்தின் ஹீரோ யார் என்பதை தயாரிப்பு நிறுவனமோ இயக்குனரோ இன்னும் தேர்வு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவே இல்லை என்றும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைக்களமாக உருவாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்படம் சுதந்திரத்துக்கு முந்தைய காலகடத்தில் நடக்கும் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

adbanner