‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!

ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரல்!

இயக்குனர் மணிரத்னம் கல்கி எழுதிய புராதன கதையான பொன்னியின் செல்வனை பிரமாண்டமான வகையில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய முன்னணி நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

Ponniyin Selvan, A R Rahman 13-Aug-2022

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘பொன்னி நதி’ என்ற பாடல் வெளியாகி பலர் மதியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூடுதல் கவனம் பெற்றது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் வீடியோ உள்ள நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.

adbanner