‘விக்ரம் 2’ படத்தில் கமலுக்கு வில்லனாகும் லோகேஷின் ஆஸ்த்தான பிரபல நடிகர்! மாஸ் அப்டேட்

‘விக்ரம் 2’ படம் குறித்து வெளியான பக்கா மாஸ் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ படம் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்துள்ளது. இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா, நரேன் போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

Vikram 2, Kamal, Mansoor Ali Khan 13-Aug-2022

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த அனைத்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள், ரசிகர்கள் போன்ற பலரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதை தொடர்ந்து ‘தளபதி 67’படத்தின் வேலைகளைத் தொடங்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம் 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மன்சூர் அலிகானை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

adbanner