சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் – மும்பையில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை!

முன்னணி நடிகை ஒருவர் முக்கிய பிரதேசத்தில் வீடு வாங்கியது குறித்த செய்தி!

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி வகிக்கும் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பதும் அந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rashmika Mandanna 13-Aug-2022

இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில், தமிழ், தெலுங்குப்படத்தைத் தொடர்ந்து, இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் ‘குட் பை’, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களிலும் பிரபல ஓடிடியில் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.

இதுவரை இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பைக்குச் சென்று ஹோட்டலில் தங்கி வந்த ரஷ்மிக மந்தனா, தற்போது மும்பையில் உள்ள முக்கிய பிரதேசத்தில் பிரமாண்ட வீடு வாங்கியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகியுள்ளது.